Dr.C.Sylendra Babu IPS

Dr.C.Sylendra Babu IPS - டாக்டர். சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்

DIRECTOR GENERAL OF POLICE (Law & Order) - தமிழக காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு).

முனைவர் சைலேந்திர பாபு (பிறப்பு: ஜூன் 5, 1962) ஓர் இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார். இவர் தற்போது தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு டிஜிபி ஆவார்.  இவர் 2012ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராகப் (ADGP) பணியாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் குற்றவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று சிறப்புரையாற்றி வளரும் இளைஞர்கள் மத்தியில் நல்ல விதையை விதைக்க இவர் எப்போதும் தவறியதில்லை. உடற்திறன் மீது இவருக்கு அலாதி பிரியம் உண்டு. மேலும், கல்வி, புத்தகம் எழுதுவது போன்றவை இவரது அன்றாட வேலை மற்றும் செயல்பாடுகளில் ஒன்றிப்போய் இருப்பவை ஆகும்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு முடித்து, மதுரையில் அமைந்துள்ள விவசாயப் பல்கலைக்கழகத்தில், விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொதுச்சட்டம் இளங்கலை பட்டமும் மக்கள் தொகை கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் அவருடைய “காணாமல் போன குழந்தைகள் (Missing Children)” குறித்த ஆய்வறிக்கைக்காக முனைவர் பட்டம் பெற்றார். 2013ஆம் ஆண்டில் மனித வள வணிக நிர்வாக படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

ஹைதராபாத் தேசிய காவல்துறை அகாடமியில் பயிற்சி பெற்று கடந்த 1987-ம் ஆண்டு சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள், இந்திய காவல்துறை அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார்.

சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள் பெற்ற பதவி உயர்வுகள்

  • போலீஸ் கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ADGP) – ஏப்ரல் 23, 2012
  • இன்ஸ்பெக்டர் ஜெனரல் (IG) – டிசம்பர் 20, 2006
  • துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (DIG) – மார்ச் 2001
  • காவல்துறை கண்காணிப்பாளர் (SP) – ஜனவரி 1992
  • கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் (ASP) – அக்டோபர் 1989

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

  • வீரப்பதக்கம் – நக்சலைட் என்கவுண்டர் (1993) மற்றும் யானை தந்தம் வெட்டியவர்கள் கைது
  • முதலமைச்சர் பதக்கம் (2000) – சிறந்த வேலைப்பாடு – கடலூரில் வகுப்புவாத கலவரங்கள் தடுப்பு.
  • பிரதமர் பதக்கம் (2001) – 1997ம் ஆண்டு சிவகங்கையில் ஏரியில் கவிழ்ந்த பேருந்தில் இருந்து 18 நபர்களை உயிருடன் காப்பாற்றியதற்காக.
  • ஜானதிபதி விருது (2005) – புகழத்தக்க சேவை செய்தமைக்காக.
  • சிறந்த முன்னாள் மாணவர் விருது – தமிழக வேளாண் பல்கலைக்கழகம், 15 வருடங்களாக அரசு சேவை தேர்வுக்காக மாணவர்களுக்கு ஊக்கமளித்ததற்காக வழங்கப்பட்ட விருது.
  • ஜனாதிபதி போலீஸ் விருது(2013) – சிறப்புமிகு சேவைக்காக

புத்தகங்கள்
படிப்பு மற்றுமின்றி எழுத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள். ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் இவர் நூல்கள் எழுதியுள்ளார்.

  • உடலினை உறுதி செய்
  • அமெரிக்காவில் 24 நாட்கள்
  • நீங்களும் ஐ பி எஸ் அதிகாரி ஆகலாம்
  • You Too Can Become an I.P.S. Officer
  • Boys & Girls – Be Ambitious
  • Principles of success in interview

ஆசிய முதுநிலை மெய்வல்லுனர் போட்டிகள்

2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய முதுநிலை மெய்வல்லுனர் போட்டிகள் ( Asian Masters Athletic Championships) நூறு மீட்டார் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்டார். மேலும் சென்னை, கோவையில் நடைபெற்ற ௧ பத்தாயிரம் மீட்டார் மராத்தான் போட்டிகளிலும் பங்கெடுத்துள்ளார் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள்

DGP Sylendra Babu News

அதிரடி வேட்டை ஒரே நாளில், 433 ரவுடிகளிடம் நடவடிக்கை!

தமிழகத்தில் புதிய D.G.P பதவியேற்பு

சென்னை : தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும் குற்றங்களைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும்....

சாம்பியன் பட்டம் வென்ற D.G.P அவர்கள்

சாம்பியன் பட்டம் வென்ற D.G.P அவர்கள்

சென்னை : தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சூடும் இறுதி சுற்று போட்டி சென்னையில் உள்ள கமாண்டோ துப்பாக்கிச் சுடும் தளத்தில் நடைபெற்றது , தமிழ்நாடு முழுவதிலும்...

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

சென்னை : இன்று தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை தலைவர்கள் மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னை...

கோவையில் டி.ஜி.பி வெளியிட்ட புதிய ஆக்டோபஸ் மென்பொருள் செயலி

கோவையில் டி.ஜி.பி வெளியிட்ட புதிய ஆக்டோபஸ் மென்பொருள் செயலி

கோவை : கோவை மாநகர காவல் துறையின் நுண்ணறிவு பிரிவு, சிறப்பு நுண்ணறிவு பிரிவு, ஆகியவற்றின் மூலம் களத்தில் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் பகுப்பாய்ந்து, சட்டம்...

மதுரை காவலர்களுக்கு  ரூ.1 இலட்சம் வெகுமதி வழங்கி பாராட்டிய டிஜிபி

மதுரை காவலர்களுக்கு ரூ.1 இலட்சம் வெகுமதி வழங்கி பாராட்டிய டிஜிபி

மதுரை: மதுரை மாநகர் கீரைத்துறை காவல்நிலைய காவலர்கள் வாகன தணிக்கையில்  கடந்த 09.05.2023 அன்று ஈடுபட்டிருந்தபோது ஒரு காரில் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது....

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினருக்கு டி.ஜி.பி பாராட்டு.

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினருக்கு டி.ஜி.பி பாராட்டு.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில்  கடந்த 12.02.2023-ந் தேதி நடந்த ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் தொடர் தீவிர முயற்சியால்...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist