தென்காசி: தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சூரிய காந்தி என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க புளியங்குடி காவல் ஆய்வாளர் திரு. ராஜாராம் அவர்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில்,மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில்,மேற்படி TN புதுக்குடியை சேர்ந்த சுந்தரேசன் என்பவரின் மகன் சூரிய காந்தி 22 என்ற நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 01.03.2022 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் திரு.ராஜாராம் அவர்கள் சமர்பித்தார்..