திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் பின்தொடர்ந்து வந்த நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அப்பெண் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஸ்ரீனிவாசகன் அவர்கள் தலைமையில் SI திரு.சரவணகுமார், திரு.கணேசன், தலைமை காவலர் திரு.சீனிவாசன், திரு.ஞானவேல், முதல்நிலை காவலர் திரு.வேளாங்கண்ணி, திரு.முத்துசாமி, திரு.மாரீஸ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடிவந்தனர். இதையடுத்து திண்டுக்கல்-பழநி சாலையில் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அப்பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் திண்டுக்கல்லைச் சேர்ந்த வினோத்குமார் (25), வெள்ளையன் ராஜா (27), குருவி சரவணன் (34) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 4 பவுன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா