மதுரை : மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் 13.11.2020 தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடையின் உள்ளே சென்று தீயை அணைக்க முற்பட்ட 4 தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தனர் அவர்களில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிவராஜன் என்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள் சிகிச்சை பலன்அளிக்காமல் உயிரிழந்தனர்.
உயிர் தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களுக்கு காவல்துறை இயக்குநர் திரு.ஜாபர்சேட் IPS அவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்..]
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.