கோவை : கரூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் வயது 41. விவசாயம் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். நேற்று மதியம் இவர் அரசு பஸ்சில் கரூரில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தார். அந்த பஸ் காங்கேயம் பஸ்ஸ்டாப்பில் நின்றபோது, ஒருவர் பஸ்ஸில் ஏறி செல்வராஜ் சீட் அருகே உட்கார்ந்தார். செல்வராஜ் உடன் பேச்சுக் கொடுத்தார். பின்னர் தான் வைத்திருந்த மிட்டாயை அவரிடம் கொடுத்தார். இந்த மிட்டாய் மூலிகை மிட்டாய் ஆகும். இதை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று கூறினார். செல்வராஜ் அதை வாங்கி சாப்பிட்டார்.
சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. பின்னர் என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியவில்லை. சிங்கநல்லூர் பஸ் நிலையம் வந்து இறங்கியதும், அவர் அணிந்திருந்த 2 பவுன் மோதிரம் சட்டை பையில் வைத்திருந்த பணம், ரூ 20 ஆயிரம் ஏடிஎம் காரடு, ஆகியவற்றை காணவில்லை. அருகில் பஸ்சில் பயணம் செய்த அந்த ஆசாமி மயக்க மருந்து தடவிய மிட்டாய் கொடுத்து நகை பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் செல்வராஜ் புகார் செய்யச் சென்றார், இந்த சம்பவம் காங்கேயத்தில் நடந்ததால் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அனுப்பிவைக்கப்பட்டார்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்