கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புலவனூர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் சிலர் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு. அம்பேத்கார் அவர்களுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு இருந்த விழுப்புரம் மாவட்டம் வடவாம்பாளையம் பகுதியை சேர்ந்த அன்பரசன், சிலம்பரசன் சீதாராமன் ,கௌதம் 4 பேர் பண்ருட்டி கண்டரக்கோட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மாரியப்பன், அய்யனார் மூன்று பேர் மற்றும் வேலாவெட்டி புலவனூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை சிவலிங்கம் இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் உபகரங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்