ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கடந்த மாதம் இலங்கைக்கு கடத்திவிருந்த ரூபாய் 3 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் செம்மரகட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதில் 9 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் தொடர்ச்சியாக போலீசார் நடத்திய விசாரணையில் கடலோர பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ₹ 2.50 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இதில், நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்அவர்களிடமிருந்து 2 சிங்கப்பற்கள், 2 மான் கொம்புகள், 1.130 கிலோ கிராம் ஹெராயின், ஆம்பெட்டாமைன் போதைப்பொருள் 1.090 கிலோகிராம், 300 கிராம் கொகைன் போதைப்பொருள், மெத்தாகொலைன் போதைப்பொருள் 80 கிராம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, எஸ்.பி அலுவலகத்தில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்