சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 10.05..2020, அன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்த ஆயுதப்படை காவலர்கள் தங்கியுள்ள புனித தோமையர் மலை, Mont Fort மெட்ரிக்குலேசன் உயர் நிலை பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கொரோனா நோய்தொற்று குறித்து விழிப்புணர்வு ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் தெற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.மகேஷ்வரி, இ.கா.ப, புனித தோமையர் மலை துணை ஆணையாளர் திரு.பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்

S. அதிசயராஜ்
சென்னை