திண்டுக்கல் : பழனி அடிவாரம் மதனபுரத்தில் ஒருவரையும்இ சித்தநாதன் திருமண மண்டபம் அருகில் ஒருவரையும் மர்மநபர்கள் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியதில் முகம் சிதைந்த நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
மற்றொரு நபரை கழுத்து வெட்டுப்பட்ட நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெட்டிய இடத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு கொலையாளிகள் தப்பி ஓடி உள்ளனர்.
வெட்டுப்பட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சம்பவம் திண்டுக்கல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா