திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி வாரந்தோறும் சனிக்கிழமையன்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு கவாத்து பயிற்சி, ஆயுதங்களை சிறப்பாக கையாளும் முறைகள் மற்றும் உடற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சிகள் குறித்து பார்வையிட்டு காவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் குறித்து ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினார். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல்துறையினருக்கு கவாத்து பயிற்சி மற்றும் உடற் பயிற்சி வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
