திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தற்போது மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று 06.11.2020 ம்தேதி காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர்.
இதில் திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அருண் ஆரோக்கியம் (29), ஆரோக்கியமேரி (50) ஆகிய இருவரையும் ஆய்வாளர் திரு.உலகநாதன் அவர்கள் கைது செய்து அவர்ககளிடமிருந்து 1.150 kg கஞ்சா பறிமுதல் செய்தனர்.
நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிறுத்தம் அருகே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பாவம்(30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.100 kg கஞ்சா மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளியம்மன் கோவில் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த ஒச்சப்பன் (49) என்பவரை காவல் ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள் கைது செய்து அவரிடம் இருந்து 1.200 kg கஞ்சா பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
