திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.சி பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கள்ளக்கிணறு கிராமத்தில் நக்சல் தடுப்பு பிரிவி ஆய்வாளர் திரு.ஜெய் சிங் மற்றும் திண்டுக்கல் ரோட்டரி கிளப் மிட்டவுன் அமைப்பினர் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொரோனா நிவாரண பொருள் வழங்கும் நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துசாமி, IPS அவர்கள் கலந்து கொண்டார்.
திண்டுக்கல் காவல் சரக துணை தலைவர் முத்துச்சாமி ஐபிஎஸ் பேசுகையில், 600 ரூபாய்க்கு எனது தாயார் தோடை அடகு வைத்து படிக்க வைத்ததால் இன்று காவல்துறை டிஐஜி ஆகியுள்ளேன். கொடைக்கானல் கீழ்மலை பழங்குடி கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பற்றியும், மாணவ, மாணவியர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பது பற்றியும், கட்டாயம் அனைவரும் முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும்,எடுத்துக் கூறினார்கள். மேலும் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களும், திண்டுக்கல் ரோட்டரி கிளப் மிட்டவுன் அமைப்பினரும் இணைந்து, சுமார் 80 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களும், முகக் கவசங்களும் வழங்கி, அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்கள்.
இதில் தாண்டிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் திரு.முருகன் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
