சென்னை: கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 1500 காவலர்கள் கொரானா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில் 5 காவலர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். உயிரை பணயம் வைத்து, பொதுமக்கள் உயிரை காக்கும் உன்னத பணியில் இருக்கும், நம் காவலர்கள் நலன் கருதி அவர்களுக்கு தமிழ்நாடு காவலர் குடும்பம் நல கூட்டமைப்பு சார்பாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, காவல்துறையினருக்கு நோய் தொற்றாமல், பாதுகாப்பாக பணிபுரிவதற்கு, முகக் கவசங்கள், கையுறைகள், கிருமி நாசினிகள் உட்பட 80,000 ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு கவசங்களை துரைபாக்கம் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையர், செம்பியம் காவல் ஆய்வாளர் திரு. ஜெகன் நாதன், குமரன் நகர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. கலையரசன், தி.நகர் சட்டம்-ஒழுங்கு காவல் உதவி ஆணையர், கிண்டி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.சந்துரு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.கருணாகரன் ஆகியோரிடம், தமிழ்நாடு காவலர் குடும்பம் நல கூட்டமைப்பு நிறுவனர் திரு.பெரம்பை சண்முகம் மற்றும் துணைத் தலைவர் சைதை திரு.சந்துரு ஆகியோர் காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று வழங்கினர்.