சென்னை : சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், பொதுமக்களுடன் நல்லுறவு ஏற்படும் வகையில் காவல் துறையினர் செயல்படுமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், வளசரவாக்கம் சரக காவல் உதவி ஆணையாளர் தலைமையில், ராயலா நகர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர், இன்று (14.10.2020) மாலை வ.உ.சி நகர், திருமலை நகர் மற்றும் ராமபுரம் ஆகிய பகுதிகளுக்கு (Foot Patrolling) நடந்து சென்று, காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படும் விதமாக பொது மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினர். மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஏதாவது சந்தேகநபர்கள், குற்ற சம்பவங்கள் பற்றி தகவல் தெரிந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்கும்படியும் காவல் அதிகாரிகளின் கைப்பேசி எண்களை பொது மக்களுக்கு வழங்கினர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்