இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள தோணித்துறை வழியாக, இருவர் சட்டவிரோதமாக இலங்கை செல்ல இருப்பதாக கியூ பிரிவு ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், நிஜாமுதீன் மற்றும் அவருக்கு உதவி புரிந்த கௌரிசங்கர் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் U/s 12(1) (a) Passport Act-1967 14(c) of Foreigners Act-1946 3(a) 6(a) Passport(Entry into India) r/w 120(B) IPC-ன் கீழ் கைது செய்தார்.
வீடு புகுந்து திருட முயற்சித்தவர் கைது
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள N.கோபாலபுரம் பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் திருட வேண்டும் என்ற நோக்கத்தில் நுழைந்த அய்யமூர்த்தி என்பவரை SI திரு.முருகானந்தம் அவர்கள்U/s 457, 294(b), 506 (i), 511 IPC and 4 of W/H Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
செல்போன்களை திருடியவர் கைது.
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த வினித் குமார் என்பவரின் செல்போன்களை திருடிச் சென்ற மேலச்செல்வனூரை சேர்ந்த சிவமணிகண்டன் என்பவரை ஆய்வாளர் திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள் U/s 379 IPC -ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.