கோவை: கோவை அவினாசி ரோட்டில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் அங்கேயே தங்கி பயிற்சி பெறுகின்றனர். இவர்களில் நேற்று முன்தினம் 17 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து காவலர்கள் தங்கியிருந்த விடுதி வளாகம் மூடி சீல் வைக்கப்பட்டது. பயிற்சி காவலர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பயிற்சியின் போது மற்றவர்கள் யாருக்காவது கொரானா பரவியுள்ளதா? என சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே காவலர் பயிற்சி மைய குடியிருப்பில் வசித்த சிலருக்கு நோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடதக்கது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்
நமது குடியுரிமை நிருபர்
