இராணிப்பேட்டை: நம் நாட்டை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது இந்த கொடிய கொரோனா வைரஸ். உலகையே உலுக்கிய வருகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமி எனும் கொரோனாவுக்கு என எதிரான போரில், போர் வீரர்களாக தங்கள் உயிர்களை கூட பெரிதாக எண்ணாமல் களத்தில் போராடுபவர்கள் நமது காவலர்கள்.
கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அரசு அறிவித்த 144 ஊரடங்கு உத்தரவை மீறிஇ வெளியில் வரும் பொது மக்களை எச்சரிக்கை செய்யவும், கொரானா வைரஸ் தொற்று குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அரக்கோணம் நகரில் முக்கிய சாலைகளில் அரக்கோணம் நகர காவல்துறை சார்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன்,IPS அவர்கள் உத்தரவின்படி, அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள் விரைவான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
கொரானா மணல் சிற்பம்
மக்கள் பார்க்கும் இடமெல்லாம், கொரானா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு யுக்திகளை காவல்துறையினர், கையாண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள் கொரானா விழிப்புணர்வு மணல் சிற்பத்தை ஏற்படுத்தி, அதனை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். பொதுமக்கள் அனைவரும் அதனை ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
ஆய்வாளரின் அரவணைப்பு
அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள் அரக்கோணம் பகுதிகளில் வசித்து வரும் சுமார் 50 வெளிமாநிலத்தை தொழிலாளர்கள் சுமார் 50 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினார்.
தன்னார்வலர்களை வழிநடத்திய ஆய்வாளர்
கொரானா பரவுதலை தடுக்க காவல்துறையினருடன் இணைந்து சுமார் 450 தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களை நேற்று ஒருங்கிணைத்த காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள் அவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி. பேபி இந்திரா, தாசில்தார் திரு.சுப்பிரமணி மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா ஒளிபரப்பு ஊடக பிரிவு மாநில தலைவர் திரு.பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்