திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சரக பகுதிகளில் தொடர்ந்து வாகனங்கள் திருடப்பட்டு வந்ததை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்கள் மேற்பார்வையின் கீழ் சார்பு ஆய்வாளர் திரு.கண்ணா காந்தி அவர்கள் தலைமை காவலர் திரு.செந்தில்குமார், திரு.நாகேந்திரன், முதல் நிலை காவலர் திரு.முத்துப்பாண்டி, திரு.பால்பாண்டி, திரு.பாலு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் வாகன திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர்களை நிலக்2கோட்டை முழுவதும் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனையின் முடிவில் வாகன திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் வாடிப்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி (28), பள்ளப்பட்டியைச் சேர்ந்த அன்பு செல்வம் (22), சத்ரியன் (19), ஆவாரம்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி (29), நவீன் (19) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
