திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவலர் குடியிருப்பு மைதானத்தில் நேற்று 28.10.2020 ம் தேதி நீத்தார் நினைவு வார விழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

காலை முதல் மாலை வரை கபடி, இறகுப்பந்து போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒட்டன்சத்திரம்
உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.அசோகன் அவர்கள் பரிசுப் பொருட்களையும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.