திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் வடமலையான் மருத்துவமனை இணைந்து நடத்தும் காவலர்களுக்கான பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை துணை தலைவர் அவர்கள் காவலர்கள் அனைவரும் தங்கள் உடல் நலத்தை பேணி காக்க வேண்டும் எனவும், தீய பழக்க வழக்கங்களை கைவிட வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்கள். இதனையடுத்து ஆயுதப்படையில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் உடல் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, இதய பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் காவல்துறை துணை தலைவர் அவர்களும் உடல் பரிசோதனையை செய்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இனிகோ திவ்யன் அவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வெள்ளைச்சாமி, அவர்கள் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஆனந்தராஜ், அவர்கள் மற்றும் வடமலையான் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
