திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் , சாணார்பட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட கிராமங்களில் சிலர் கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காவல்துறை , வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தி சிறுமலை மற்றும் தவசிமடை பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்ட நிலையில் இன்று 06.10.2020 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா , இ.கா.ப. , அவர்களின் உத்தரவின்பேரில் திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு . வினோத் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் சிறுமலை வனச்சரகர் திரு . மனோஜ் தலைமையிலான குழுவினர் சிறுமலை , தவசிமடை ஆகிய பகுதிகளில்தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் தவசிமடை கிராமம் நாகம்மாள் கோவில் அருகே உள்ள சிறுமலை ஓடை அருகே 10 நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் நாட்டுத்துப்பாக்கி பேரல் -1 கேட்பாரற்று கிடப்பது கண்டறியப்பட்டது .
இதுதொடர்பாக தவசிமடை கிராம நிர்வாக அலுவலர் திரு . திருவருட்செல்வம் கொடுக்கலான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 10 நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் நாட்டுத்துப்பாக்கி பேரல் – 1 கைப்பற்றப்பட்டது . இதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகிராமங்களான நத்தம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட மலையூர் , கரந்தமலை , கொடைக்கானல் காவல் நிலையச் சரகம் மண்ணவனூர் , கூக்ககால் , பூண்டி , தாண்டிக்குடி காவல் நிலையச்சரகம் கே.சி.பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையச்சரகம் பாச்சலூர் ஆகிய மலை கிராமங்களில் சிலர் அனுமதியின்றி உரிமம் இல்லாமல் கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக தெரியவருவதால் மேற்படி தேடுதல் வேட்டை தொடரும் என்றும் அவ்வாறு கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா , இ.கா.ப. , அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.