கோவை : கோவை மாவட்டத்தில் இன்று(23.07.2020) காலை 08.00 மணியளவில் சூலூர் குளத்தூரில் அமைந்துள்ள ACE DATA கம்பெனி முன்பு நிறுத்தியிருந்த தனது Honda Activa இரு சக்கர வாகனத்தை யாரோ களவாடி சென்று விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் சூலூர் காவல் நிலைய குற்ற எண். 1531/2020 ச / பி 379 இ.த.ச. இன் படி வழக்குப்பதிவு செய்து துரித நடவடிக்கை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி முரளி(20) என்பவரை கைது செய்து வாகனத்தை அவரிடமிருந்து கைப்பற்றிய சார்பு ஆய்வாளர் ராஜ் குமார் மற்றும் அவரது குழுவினரை காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு இ.கா.ப வெகுவாக பாராட்டியுள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்