தேனி : தேனி மாவட்டம் கூடலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்து கேரளாவிற்கு 3 வாகனங்களில் கஞ்சா கடத்தி செல்வதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.சின்னகண்ணு அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று துரிதமாக செயல்பட்டு மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து 21 கிலோகிராம் மதிப்பிலான கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இத்தகைய மெச்சத்தகுந்த பணியை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துசாமி,IPS., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,IPS., அவர்கள் மற்றும் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.சின்னகண்ணு அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.