திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற இளம்பெண் பழனி கணக்கம்பட்டி யைச் சேர்ந்த தங்கதுரை என்ற வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூட்டி கற்பழித்து கொலை செய்துவிட்டார். பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டது. உறவினர்கள் கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோஷமிட்டு சாலை மறியல் செய்து ஜெயஸ்ரீ வேலைபார்த்த கம்பெனி வாகனத்தை அடித்து உடைத்தனர். இதனால் ஒட்டன்சத்திரம் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கலில் இருந்து நமது நிருபர்
திரு.மீரா மைதீன்