இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக மஞ்சலை கடத்த இருந்த தகவல் ராமநாதபுரம் கியூ ப்ராஞ்ச்க்கு கிடைத்தது. இராமநாதபுரம் கியூபிராஞ்ச் காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) திருமதி.மகேஸ்வரி தலைமையிலான போலீசார் தொண்டி அருகே காரங்காடு கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அறையில் 93 மஞ்சள் மூட்டைகள் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணியளவில் மஞ்சள் முட்டைகளை கடற்கரை மார்க்கமாக கடத்த இருந்தவர்கள் காவல்துறையினரை கண்டவுடன் தப்பி ஓடி விட்டனர். பறிமுதல் செய்யபட்ட மஞ்சள் மதிப்பு ரூ.21 லட்சமாகும்.
க்யூ பிராஞ்ச் போலிசார் 93 மூடைகள் மஞ்சலை கைப்பற்றினார்கள். ஒரு மூட்டையில் 25 கிலோ வீதம் 2325 கிலோ 2 டன்னிற்கு மேல் மஞ்சலை கைப்பற்றி, இதை யார் இலங்கைக்கு கடல் மார்க்கமாக, கடத்த இருந்தார்கள், அவர்களுக்கு எங்கிருந்து மஞ்சள் கிடைத்தது. இந்த மஞ்சள் மூட்டைகளை இங்கு கொண்டு வந்தவர்கள், யார் யார் உள்ளுரில் யாரேனும் உடந்தையாக உள்ளார்கள் என விசாரித்து வருகிறார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி